குறுந்தொகை: பாடல் 386
குறுந்தொகை 386 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே,
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே; மாலை
நிலம் பரந்தன்ன புன்கணொடு
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.
வெள்ளிவீதியார்
வீ - மலர்
ததை - செறிதல்
கானல் - கடற்கரைச் சோலை
தணத்தல் - பிரிதல்
வால் இழை - ஒளிமிக்க அணிகலன்
விழவு அணி - சிறந்த அணி, விழவுக்கான அணி
மன் - இரக்கம்
புன்கண் - துன்பம்,நோய்,மெலிவு
புலம்பு - தனிமை
'குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்/
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை - துணை இலோர்க்கே' (குறுந்.234:4-6)
சிறு புன் மாலை உண்மை
அறிவேன் - தோழி! அவர்க் காணா ஊங்கே (குறுந்.314:3)
புலம்பு கொள் மாலை (குறுந்.314:3)
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை (குறுந்.195:2)
தனியோர் இரங்கும் பனிகூர் மாலை (குறுந்.358:5)
கையற வந்த பையுள் மாலை (குறுந்.391:6)
எல்லை கழிய, முல்லை மலர,
கதிர் சினம் தணிந்த கையறு மாலை,
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின்,
எவன்கொல்! வாழி! - தோழி! -
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!(குறுந்.387)
கங்குல் வெள்ளத்தார்
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.(குறள்.1226)
புன் கண் மாலை
-------------------------------
குறுந்தொகை
46:6,330:6,338:4,344:6,398:5
புன் கண் மாலை
நற்.73:4,89:11,117:7,162:3,215:3
அகம்.47:13,74:15,365:3
புறம்.65:8
நன்றி - http ://tamil concordance.in
