குறுந்தொகை: பாடல் 387

குறுந்தொகை 387 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

எல்லை கழிய, முல்லை மலர,

கதிர் சினம் தணிந்த கையறு மாலை,

உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்,

எவன்கொல் வாழி?-தோழி!-

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.

கங்குல் வெள்ளத்தார்

எல்லை - பகல்

கதிர் - ஞாயிறு,சூரியன்

சினம் - சூரிய ஒளியின் வெப்பம்

நீந்தினம் - கடந்தேம்

எவன் - யாது பயன்?

கொல் - அசைநிலை

கங்குல் வெள்ளம் - இரவாகிய வெள்ளம்

காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி

மாலை மலரும்இந் நோய்.(குறள்.1227)

...........மாலை/ நிலம் பரந்தன்ன புன்கணொடு /

புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே (குறுந்.386:4-6)

முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?/

ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,/

'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன் கொல்?-/

அலமரல் அசை வளி அலைப்ப, என்/

உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே .(குறுந்.28)

ஔவையார்

நன்றி - http ://tamil concordance.in