குறுந்தொகை: பாடல் 388

குறுந்தொகை 388 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை

கோடை ஒற்றினும் வாடாதாகும்;

கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ

உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன

முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,

யானை கைம்மடித்து உயவும்

கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே.

தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது.

ஒளவையார்

நிரை இதழ் - நிரல்பட்ட இதழ்கள்

கோடை - மேல் காற்று

கவணை - தோலால் ஆன பட்டை

பூட்டு - பூட்டுங் கயிறு

அசாஅ - வருத்தம்

தோடு - தொகுதி

முளி சினை - உலர்ந்த கிளை

முன்பின்மை - வலியின்மை

வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்

கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்

உடு உறு கணையின் போகி, சாரல்

வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ

பலவின் பழத்துள் தங்கும்

மலை கெழு நாடன் (அகம்.292:10-15)

புறம்(152:1-5)

நன்றி - http ://tamil concordance.in