குறுந்தொகை: பாடல் 389
குறுந்தொகை 389 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை-
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்
''நன்றோ மகனே?'' என்றனென்;
''நன்றே போலும்'' என்று உரைத்தோனே.
தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.
வேட்ட கண்ணன்
குறும்பூழ் - சிறு பறவை
காயம் - குழம்பு
ஆர்பதம் - உண்ணும் சோறு
அத்தை - அசைநிலை
வரைந்தென - வரைவுக்குரியன செய்தல்
பெரும் பெயர் உலகம் (குறுந்.83:1-2)
அமிழ்தம் உண்க (குறுந்.83:1-2)
உயர்நிலை உலகமும் சிறிது(குறுந்.361:2)
நன்றி - http ://tamil concordance.in
