குறுந்தொகை: பாடல் 390
குறுந்தொகை 390 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்-
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!-
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,
வளை அணி நெடு வேல் ஏந்தி,
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.
புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுதும் செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது.
உறையூர் முதுகொற்றன்
எல் - ஞாயிறு,சூரியன்
எல்லின்று(எல்+இன்று) - ஒளி இல்லை,மறைந்தது
செல்லாதீம் - செல்லாதீர்கள்
சிறுபிடி - தலைவி (சிறு களிறு - தலைவன் என்பது பெறப்பட்டது)
வேற்று முனை - பகைப்புலம்
சாத்து - வணிகர் கூட்டம்
இறுத்தது - தங்கியது
மிளை - காவற்காடு,குறுங் காடு
தண்ணுமைக் குரல் - முரசு
பெரும்பாணாற்றுப்படை (அடிகள் 66 - 82 )
நன்றி - http ://tamil concordance.in
