குறுந்தொகை: பாடல் 391

குறுந்தொகை 391 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

உவரி ஒருத்தல் உழாஅது மடியப்

புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்,

கடிது இடி உருமின் பாம்பு பை அவிய,

இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே;

வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர்

கையற வந்த பையுள் மாலை,

பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை

தாஅம்நீர் நனந்தலை புலம்பக்

கூஉம்-தோழி!-பெரும் பேதையவே!

பிரிவிடை, ''பருவ வரவின்கண் ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது.

பொன்மணியார்

உவரி - வெறுத்து,உவர்த்து

ஒருத்தல் - ஆண் பன்றி

உழாஅது - நிலத்தைக் கிளைக்காமல்,தோண்டாமல்

புகரி - புள்ளி மான்

புழுங்கிய - வெப்பத்தால் புழுங்கிய(வறண்ட கானம்)

புயல் - மழை

புறவு - கானம்

பை - பாம்பின் படம்

வீழ்ந்தன்று - வீழ்ந்தது,பெய்தது

தழீஇ - பொருந்தி

தாஅம் - தாவும்,பாயும்

கூஉம் - கூவும்

மஞ்ஞை

-----------------

குறுந்தொகை

38:1,105:3,194:3,251:1,391:7

பை உடை இருந் தலை துமிக்கும் ஏறு (குறுந்.268:4)

கடிது இடி உருமின் பாம்பு பை அவிய (குறுந்.291:3)

உத்தி அரவின் பைந்தலை துமிய (அகம்.202:10)

பை பட இடிக்கும் கடுங் குரல் ஏறு ( அகம்.323:11)

முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,

யானை கை மடித்து உயவும் (குறுந்388:5-6)

நன்றி - http ://tamil concordance.in