குறுந்தொகை: பாடல் 392

குறுந்தொகை 392 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!-

நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு

அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,

கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்

துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை

தமரின் தீராள் என்மோ-அரசர்

நிரை செலல் நுண் தோல் போலப்

பிரசம் தூங்கு மலைகிழவோற்கே!

வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

தும்பிசேர் கீரனார்

அம்ம,வாழியோ (வாழி+ஓ) - அசை நிலைகள்

கடவை - மான்

துடவை - தோட்டம்

துளர் -களைக் கொட்டு

துகள் - புழுதி

களைஞர் - தினைப்புனத் தில் களை எடுப்பவன்,

களையை நீக்குபவன்

செலல் -செல்லல்

தோல் - கிடுகு, கேடயம், கேடகம்,பரிசை,தடுப்பு ஆயுதம்

பிரசம் - தேனடை

தூங்கு - தொங்கும்

உழவர் தங்கை (சிறுபாண்.190)

கானவர் தங்கை (குறுந்.365:6,அகம்.132:5)

எயினர் தங்கை (ஐங்.363:2,364:1)

செல்வத் தங்கையர் (அகம்.320:3)

நன்றி - http ://tamil concordance.in