குறுந்தொகை: பாடல் 393

குறுந்தொகை 393 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்

முயங்கிய நாள் தவச் சிலவே அலரே,

கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்

பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன்

களிறொடு பட்ட ஞான்றை,

ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே

தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.

பரணர்

மயங்கு மலர் - விராவிய மலர்

கோதை - மாலை

தவ - மிகுதி

கூகை - காட்டுக் கோழி

கூகைக் கோழி - இருபெயரொட்டு

வாகை - ஊர்

பறந்தலை - பாழ்

கொங்கர் - சேரர்

குறுந்தொகையில்

அலர்( பழிமொழி):

-----------

97:4,258:2,262:1,302:6,311:1,320:8,372:7.

பீர்க்கமலர் 98:5

கோங்கமலர் 254:3

கண்டல் 340:4

புன்னை மலர் 351:5-6

சூடா வாகைப் பறந்தலை ஆடு பெற

ஒன்பது குடையும் நல் பகல் ஒழித்த

பீடு இல் மன்னர் போல

ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே (அகம்125:19-22)

தமிழ் தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறம்.19:2)

ஆலங்கானத்து அஞ்சவர இறுத்து (மதுரைக்.127)

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த (நற்.387:7)

ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப (அகம்.36:14)

ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த (அகம்.175:11)

ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது (அகம்209:3-6)

ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட (புறம்.23:15)

சூடா வாகைப் பறந்தலை (அகம்.125:20)

பரணர்

வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி

நாடு பல தந்த பசும்பூண் பாண்டியன் (அகம்.253:4-5)

நக்கீரர்

புள்ளிற்கு‌ ஏமம் ஆகிய பெரும் பெயர்

வெள்ளத்தானை அதிகன் கொன்று உவந்து

ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின் (அகம்.142:12-14)

பரணர்

வில் கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்

களிறு அணி வெல் கொடி(அகம்.162:21-22)

பரணர்

நன்றி - http ://tamil concordance.in