குறுந்தொகை: பாடல் 394

குறுந்தொகை 394 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி

நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற

குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,

முன் நாள் இனியது ஆகி, பின் நாள்

அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,

பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.

வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது.

குறியிறையார்

கய - மென்மை

குழவி - கன்று

நறவு - கள்

பாக்கம் - இடம்,ஊர்

குறி இறை - குறிய(யகரம் கெட்டது) சிறிய கை, குட்டிக் கை

மறு வருதல் - சுற்றிச் சுற்றி வருதல்

முன் நாள் - யானைக் கன்றின் இளம் பருவம்

பின் நாள் - யானைக் கன்றின் முதிர்பருவம்

சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்

தெற்றென இறீஇயரோ- ஐய! - மற்று யாம்

நும்மொடு நக்க வால் வெள் எயிறே:(குறுந்.169:1-3)

வெள்ளிவீதியார்

நன்றி - http ://tamil concordance.in