குறுந்தொகை: பாடல் 395

குறுந்தொகை 395 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நெஞ்சே நிறை ஒல்லாதே; அவரே,

அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்;

வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே;

அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக்

களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்;

அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில்

அளிதோதானே நாணே-

ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே!

வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, ''நாம் ஆண்டுச் சேறும்'' எனத் தோழிக்கு உரைத்தது.

ஒல்லாதே (ஒல்லாது+ஏ)

ஒல்லாது - பொருந்தாது, உடன்படாது,இயலாது

ஏ - அசை நிலை

பொருள் - நன்மை செய்யும் பொருள்

நுங்கு - விழுங்கு

இவணோர் - உலகோர் செயல்

களையார் - நீக்கார்

படீஇயர் - துயிலுதல்

அஞ்சல் - அஞ்சாதே

அந்தில் - அசைநிலை

அளிதோ தானே ஓ,தான்,ஏ- அசைநிலைகள்

வதிவயின்- உறைவிடத்திற்கு (வயின் வேற்றுமை உருபு )

உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்/ என் உற்றனகொல் இவை எனின் அல்லதைக்/ கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை (தொல்.பொருளியல்,நூ.9)

இரவுமனை இகந்த குறியிடத்து அல்லது

கிழவோன் சேர்தல் கிழத்திக்கு இல்லை.(இ.அ.நூ.21)

அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த

பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல

அளகம் சேர்ந்த திருநுதல் (நற்.377:6-8)

அமர்வு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப (அகம்.313:7)

உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு

அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்

சிறுபுன்மாலையும் உள்ளார்(அகம்.114:4-6)

பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால் (கலி.15:17)

நன்றி - http ://tamil concordance.in