குறுந்தொகை: பாடல் 396
குறுந்தொகை 396 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்,
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே,
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன்
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும்
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே?
மகட் போக்கிய தாய் உரைத்தது.
கயமன்.
அயர்வோள்- விளையாடுபவள்
இனி - இப்பொழுது
முளி சினை - உலர்ந்த மரக் கிளை
உயர் கோட்டு - ஏந்திய மருப்பு
ஒருத்தல் - களிறு
வெவ் அறை - வெப்ப மிக்க பாறை
கவாஅன் - சரிவு, மலையடிவாரம்
கடுங் குரல் - முகில்களின் முழக்கம்
ஓர்க்கும் - காது கொடுத்துக் கேட்கும்
கழை - மூங்கில்
திரங்கு - உலர்ந்த மூங்கில்
ஆர் இடை- (செல்லுவதற்கு) அரிய வழி
செலவு - செல்லுதல்
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,
யானை கை மடித்து உயவும்
கானம்.(குறுந்.388:5-7)
ஔவையார்
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப்
போழ் புண் படுத்த பொரி அரை ஓமை (அகம்.397:10-11)
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை (குறுந்.331:1)
நின் மகள்/பாலும் உண்ணாள்...(அகம்.48:1-2)
தேம் பெய்து/அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் (அகம்.89:19-20)
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் (அகம்.49:1)
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் (நற்.110:1)
பந்தாடு மகளிர் (ஐங்.295:5)
நன்றி - http ://tamil concordance.in
