குறுந்தொகை: பாடல் 397
குறுந்தொகை 397 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு,
''அன்னாய்!'' என்னும் குழவி போல,
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்,
நின் வரைப்பினள் என் தோழி;
தன் உறு விழுமம் களைஞரோ இலளே.
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது.
– அம்மூவன்
நனை - அரும்பு
ஞாழல் - புலிநகக் கொன்றை
சேர்ப்ப - நெய்தல் நிலத் தலைவன்
அன்னாய் - அன்னை
வரைப்பு - எல்லை
உறு - மிக்க
விழுமம் - துன்பம்
களைஞர் - நீக்குபவர்
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே
உறையூர் சல்லியன் குமாரன்
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன்/
அருள் நினைந்தே அழும் குழவி அது போன்று இருந்தேனே(பெருமாள் திருமொழி.688:3-4)
தினை மருள் திரள் வீ (குறுந்.50:1)
நன்றி - http ://tamil concordance.in
