குறுந்தொகை: பாடல் 398
குறுந்தொகை 398 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத்
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை,
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை,
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு,
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.
பிரிவுணர்த்திய தோழி, ''பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வருந் துணையும் ஆற்றியுளராவர்'' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
தேற்றாம் - அறியேம்
அன்றே(அன்று+ஏ) - அசை நிலைகள்
திவலை - நீர்த் திவலை
காலை - பொழுது,நேரம்(விடியற்காலை அன்று)
கயல் - மீன்
உண்கண் - மையுண்ட கண்
கைஉறை - கையில் உறைகின்ற(விளக்கு)
எடுப்பும் - எழுப்பும்
உகுபனி - கண்ணீர்த் துளி
அரக்குவோர்- துடைப்போர்
மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇக்
கை அமை விளக்கம் நந்து-தொறு மாட்ட (முல்லைப்.47-49)
இரும்பு செய் விளக்கின் ஈர் திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது (நெடுநல்.42-43)
மனை விளக்குறுத்து மாலை தொடரி (அகம்.86:4)
நல்லாவூர் கிழார்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி (கார்த்திகைத் திருவிழா பற்றி)
(அகம்.141:9)
நக்கீரர்
மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்
வேலைநீ வாழி பொழுது. (குறள்.1221)
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.(குறள்.1224)
நன்றி - http ://tamil concordance.in
