குறுந்தொகை: பாடல் 400

குறுந்தொகை 400 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

''சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று,

களைகலம் காமம், பெருந்தோட்கு'' என்று,

நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,

முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப்

புது வழிப் படுத்த மதியுடை வலவோய்!

இன்று தந்தனை தேரோ-

நோய் உழந்து உறைவியை நல்கலானே?

வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது.

பேயனார்

சேயாறு - நீண்ட வழி

களைகலம் -களைய மாட்டோம்

பெருந்தோள் -தலைவி தோள் (அன்மொழித் தொகை)

முரம்பு - பருக்கைக் கற்கள்

உடைய - நொறுங்கும் படி

கரம்பை - வண்டல் மண்

ஏகி - செல்லுதல்

நின் நயந்து உறைவி (ஐங்.273:4,309:3,நற்.168:7)

எம் நயந்து உறைவி (நற்.176:1)

இன்னாது உறைவி (அகம்.164:10,புறம்.145:10)

துஞ்சாது உறைவி (அகம்.298:23)

நம் நயந்து உறைவி (அகம்.379:1)

புள்ளுத் தொழுது உறைவி (அகம்.351:17)

நோய் நொந்து உறைவி (குறுந்.192:2,400:7)

சங்க இலக்கியத்தில் மனித நேயம் சென்னை : என்.சி.பி.எச்., 2012- முனைவர் த.வசந்தாள்

நன்றி - http ://tamil concordance.in