குறுந்தொகை: பாடல் 79
குறுந்தொகை 79 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் (படம்)
சேர்ந்தனர் கொல்லோ தாமே யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லாது ஏகல் வல்லுவோரே.
பொருள்வயின் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
குடவாயிற் கீரனக்கன்
தோல் -ஓமை மரப்பட்டை
பொரிதாள்- வறண்ட அடிப்பகுதி
ஓமை- மரம்
அலங்கல் -அசைதல்
உலவை காய்ந்த கொம்பு
ஒய்- விரைந்து (ஒலிக் குறிப்புச்சொல்)
புலம்பு தருகுரல்- பெண் புறவின் குரல்
புறவு - ஆண் புறா (புறவு - புறா- புற+உகரம்)
பெடை - பெண் புறா
பயிரும்- அழைக்கும்
அத்தம் - வழி
சேர்ந்தனர் - தங்கினர்
கொல் - ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்
ஒல்லேம் - இயலாது(எதிர்ச் சொல் ஒல்லும் - இயலும்)
(ஒல்லு - பொறுத்துக்கொள்/உடன்படு/சம்மதி)
தப்பல் - தவறு
Ask
