குறுந்தொகை: கடவுள் வாழ்த்து

குறுந்தொகையின் தொடக்கமாக அமைந்துள்ள கடவுள் வாழ்த்து பாடல், சங்க இலக்கியத்தின் ஆன்மிக ஆழத்தையும் தமிழரின் பண்பாட்டு மரபையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பதிவில், குறுந்தொகை கடவுள் வாழ்த்து பாடலின் பொருள், இலக்கியச் சிறப்பு, பின்னணி மற்றும் ஒலி உரை விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

KURUNTHOHAI

T Vasanthal

1/1/20261 min read

தாமரை புரையும் காமர் சேவடி,

பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளி,

குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின்

நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்

சேவல் அம் கொடியோன் காப்ப

ஏம வைகல் எய்தின்றால் உலகே

  • பாரதம் பாடிய பெருந்தேவனார்

புறநானூறு 56:7-8, பரிபாடலில் செவ்வேளைப் பற்றி எட்டுப் பாடல்கள் (6,8,9,14,17,18,19,21) உள்ளன. பரி.8:29,130/14:17-18/17:48-49/21:68-70

ஒலி உரை : முனைவர் த. வசந்தாள்