திருக்குறள்- 39. இறைமாட்சி

திருக்குறள் 39. இறைமாட்சி அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

இறைமாட்சி- 39

381. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

382. அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

383. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலன்ஆள் பவற்கு

384. அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா

மானம் உடையது அரசு

385. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு

386. காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

387. இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்

தான்கண் டனைத்துஇவ் உலகு

388. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறைஎன்று வைக்கப் படும்

389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

390. கொடைஅளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க்கு ஒளி

#திருக்குறள் #Tirukkural #TamilWisdom #ClassicalTamil #SangamLiterature #கல்லாமை #Kurunthogai #TamilHeritage #தமிழர்வளCulture #tamilquotes