பொருட்பால்- 40. கல்வி
திருக்குறள் 40. கல்வி அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
கல்வி- 40
391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
392. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்இரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
393. கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர்
394. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
396. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு
397. யாதானும் நாடுஆமால் ஊர்ஆமால் என்ஒருவன்
சாம்துணையும் கல்லாத வாறு
398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
399. தாம்இன்புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
400. கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை
