திருக்குறள்- 41. கல்லாமை

திருக்குறள் 41. கல்லாமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

திருக்குறள் பார்வையில் கல்லாமையின் விலை

41. கல்லாமை

401. அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்

402. கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று

403. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லாது இருக்கப் பெறின்

404. கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்

கொள்ளார் அறிவுடை யார்

405. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்

406. உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்

407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று

408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு

409. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்துஇலர் பாடு

410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

#திருக்குறள் #Tirukkural #TamilWisdom #ClassicalTamil #SangamLiterature #கல்லாமை #Kurunthogai #TamilHeritage #தமிழர்வளCulture #TamilQuotes