திருக்குறள்- 42 . கேள்வி

திருக்குறள் 42. . கேள்வி அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

42. கேள்வி

411. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

412. செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்

413. செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின்

ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

414. கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை

415. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

416. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்

417. பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்து

ஈண்டிய கேள்வி யவர்

418. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி

419. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது

420. செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?