திருக்குறள்- 43. அறிவுடைமை

திருக்குறள் 43. அறிவுடைமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

அறிவுடைமை

421. அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்அழிக்கல் ஆகா அரண்

422. சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப் பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

424. எண்பொருள ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்பது அறிவு

425. உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு

426. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு

427. அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்

428. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

429. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதுஓர் நோய்

430. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்உடைய ரேனும் இலர்