திருக்குறள்- 44. குற்றங்கடிதல்

திருக்குறள் 44. குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

44. குற்றங்கடிதல்

431. செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து

432. இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு

433. தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்

434. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை

435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்

436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு?

437. செயற்பால செய்யாது இவறியான் செல்வம்

உயற்பாலது அன்றிக் கெடும்

438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதுஒன்று அன்று

439. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை

440. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்