திருக்குறள்- 45. பெரியாரைத் துணைக்கோடல்
திருக்குறள் 45. பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 441
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்
___________________________________________________________
குறள் 442
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
___________________________________________________________
குறள் 443
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
___________________________________________________________
குறள் 444
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை
___________________________________________________________
குறள் 445
சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
___________________________________________________________
குறள் 446
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்
___________________________________________________________
குறள் 447
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?
___________________________________________________________
குறள் 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
___________________________________________________________
குறள் 449
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலைஆம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை
___________________________________________________________
குறள் 450
பல்லார்பகை கொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்