திருக்குறள்- 46. சிற்றினம் சேராமை
திருக்குறள் 46. சிற்றினம் சேராமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
452. நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்ப தாகும் அறிவு
453. மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்
454. மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉளது ஆகும் அறிவு
455. மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்
456. மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை
457. மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்
458. மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து
459. மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து
460. நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்
