திருக்குறள்- 47. தெரிந்து செயல் வகை

திருக்குறள் 47. தெரிந்து செயல் வகை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

47. தெரிந்து செயல் வகை

461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்

462. தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்

463. ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்

464. தெளிவி லதனைத் தொடங்கார், இளிவுஎன்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்

465. வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதுஓர் ஆறு

466. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

467. எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்

எண்ணுவம் என்பது இழுக்கு

468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று

போற்றினும் பொத்துப் படும்

469. நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்

பண்புஅறிந்து ஆற்றாக் கடை

470. எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளாது உலகு

#திருக்குறள் #Tirukkural #TamilWisdom #ClassicalTamil #SangamLiterature #கல்லாமை #Kurunthogai #TamilHeritage #தமிழர்வளCulture #tamilquotes