திருக்குறள்- 48. வலியறிதல்
திருக்குறள் 48. வலியறிதல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

48. வலியறிதல்
471. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
472. ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
473. உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
474. அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
475. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்
477. ஆற்றின் அளவுஅறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
478. ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகாறு அகலாக் கடை
479. அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
480. உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும்
