திருக்குறள்- 49. காலம் அறிதல்

திருக்குறள் 49. காலம் அறிதல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

49.காலம் அறிதல்

481. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தற்கு வேண்டும் பொழுது

482. பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு

483. அருவினை என்ப உளவோ? கருவியான்

காலம் அறிந்து செயின்

484. ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தான் செயின்

485. காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்

486. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து

487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

488. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை

489. எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்

490. கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

குத்துஒக்க சீர்த்த இடத்து