திருக்குறள்- 50. இடனறிதல்

திருக்குறள் 50. இடனறிதல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

50. இடனறிதல்

491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடம்கண்ட பின்அல் லது

492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவும் தரும்

493. ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்

494. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து

துன்னியார் துன்னிச் செயின்

495. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற

496. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து

497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்

498. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்

499. சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

500. கால்ஆழ் களரின் நரிஅடும் கண் அஞ்சா

வேல்ஆள் முகத்த களிறு