திருக்குறள்- 51. தெரிந்து தெளிதல்

திருக்குறள் 51. தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

51. தெரிந்து தெளிதல்

501. அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும்

502. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாண்உடையான் கட்டே தெளிவு

503. அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு

504. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்

506. அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்

பற்றிலர் நாணார் பழி

507. காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாம் தரும்

508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்

509. தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்

510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்