திருக்குறள்- 52. தெரிந்து வினையாடல்

திருக்குறள் 52. தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

52. தெரிந்து வினையாடல்

511. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்

512. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை

513. அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்

நன்குஉடையான் கட்டே தெளிவு

514. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையால்

வேறுஆகும் மாந்தர் பலர்

515. அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று

516. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்

517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல்

518. வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை

அதற்குஉரியன் ஆகச் செயல்

519. வினைக்கண் வினைஉடையான் கேண்மை வேறுஆக

நினைப்பானை நீங்கும் திரு

520. நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடாது உலகு