திருக்குறள்- 53. சுற்றம் தழால்

திருக்குறள் 53. சுற்றம் தழால் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

53. சுற்றம் தழால்

521. பற்றுஅற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள

522. விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா

ஆக்கம் பலவும் தரும்

523. அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடுஇன்றி நீர்நிறைந்து அற்று

524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்

525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்

526. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குஉடையார் மாநிலத்து இல்

527. காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள

528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்

529. தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்

530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்