திருக்குறள்- 54. பொச்சாவாமை
திருக்குறள் 54. பொச்சாவாமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
54. பொச்சாவாமை
531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு
532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்புக்கொன் றாங்கு
533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு
534. அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்குஇல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு
535. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்
536. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல்
537. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியான் போற்றிச் செயின்
538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்
539. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
540. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்
