திருக்குறள்- 55. செங்கோன்மை

திருக்குறள் 55. செங்கோன்மை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

55. செங்கோன்மை

541. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை

542. வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி

543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்

544. குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு

545. இயல்புஉளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு

546. வேல்அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாது எனின்

547. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்

548. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்

549. குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்

வடுஅன்று வேந்தன் தொழில்

550. கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்