திருக்குறள்- 56. கொடுங்கோன்மை

திருக்குறள் 56. கொடுங்கோன்மை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

56. கொடுங்கோன்மை

551. கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்துஒழுகும் வேந்து

552. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு

553. நாள்தொறும் நாடிமுறை செய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்

554. கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு

555. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

557. துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்

அளிஇன்மை வாழும் உயிர்க்கு

558. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்

559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்

560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்