திருக்குறள்- 58. கண்ணோட்டம்

திருக்குறள் 58. கண்ணோட்டம் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

58. கண்ணோட்டம்

571. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை

உண்மையான் உண்டுஇவ் வுலகு

572. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதுஇலார்

உண்மை நிலக்குப் பொறை

573. பண்‌என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்ஆம்

கண்ணோட்டம் இல்லாத கண்

574. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்?

575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்

புண்என்று உணரப் படும்

576. மண்ணோடு இயைந்த மரத்துஅனையர் கண்ணோடு

இயைந்துகண் ணோடா தவர்

577. கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்

578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்துஇவ் உலகு

579. ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்துஆற்றும் பண்பே தலை

580. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்