திருக்குறள்- 59. ஒற்றாடல்

திருக்குறள் 59. ஒற்றாடல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

59. ஒற்றாடல்

581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்

தெற்றுஎன்க மன்னவன் கண்

582. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்

583. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றம் கொளக்கிடந்தது இல்

584. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றுஆங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று

585. கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று

586. துறந்தார் படிவத்தர் ஆகிஇறந்து ஆராய்ந்து

என்செயினும் சோர்வுஇலது ஒற்று

587. மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று

588. ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்

589. ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்

சொல்தொக்க தேறப் படும்

590. சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை