திருக்குறள்- 62. ஆள்வினை உடைமை

திருக்குறள் 62. ஆள்வினை உடைமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

62. ஆள்வினை உடைமை

611. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்

612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

613. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னும் செருக்கு

614. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்

615. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்துஊன்றும் தூண்

616. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

617. மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்

தாள்உளாள் தாமரையி னாள்

618. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து

ஆள்வினை இன்மை பழி

619. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

620. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்

தாழாது உஞற்று பவர்