திருக்குறள்- 66. வினைத்தூய்மை

திருக்குறள் 66. வினைத்தூய்மை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

66. வினைத்தூய்மை

651. துணைநலம் ஆக்கம் தரும் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும்

652. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை

653. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்

654. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்குஅற்ற காட்சி யவர்

655. எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றுஅன்ன செய்யாமை நன்று

656. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை

657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை

658. கடிந்த கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்

659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை

660. சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று