திருக்குறள்- 72. அவை அறிதல்
திருக்குறள் 72. அவை அறிதல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
72. அவை அறிதல்
711. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்
712. இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
713. அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகைஅறியார் வல்லதூஉம் இல்
714. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்
715. நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
716. ஆற்றின் நிலைதளர்ந்து அற்றே வியன்புலம்
ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு
717. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடுஅறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து
718. உணர்வது உடையாரமுன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று
719. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்
720. அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் தம்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்
