திருக்குறள்- 74. நாடு
திருக்குறள் 74. நாடு அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
74. நாடு
731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்
செல்வரும் சேர்வது நாடு
732. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு
733. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு
734. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு
735. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு
736. கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை
737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்அரணும் நாட்டிற்கு உறுப்பு
738. பிணிஇன்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து
739. நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல
நாட வளந்தரும் நாடு
740. ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
வேந்துஅமைவு இல்லாத நாடு
