திருக்குறள்- 75. அரண்
திருக்குறள் 75. அரண் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
75. அரண்
741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்
742. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்
743. உயர்வுஅகலம் திண்மை அருமை இந்நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்
744. சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்
745. கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்குஎளிதாம் நீரது அரண்
746. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்
நல்ஆள் உடையது அரண்
747. முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்
748. முற்றுஆற்றி முற்றிய வரையும் பற்றுஆற்றி
பற்றியார் வெல்வது அரண்
749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண்
750. எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்
