திருக்குறள்- 79. நட்பு

திருக்குறள் 79. நட்பு அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

79. நட்பு

781. செயற்குஅரிய யாஉள நட்பின் அதுபோல்

வினைக்குஅரிய யாஉள காப்பு

782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு

783. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

784. நகுதற் பொருட்டுஅன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

785. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்புஆம் கிழமை தரும்

786. முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து

அகம்நக நட்பது நட்பு

787. அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு

788. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதுஎனின் கொட்புஇன்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

790. இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு