திருக்குறள்- 81. பழைமை

திருக்குறள் 81. பழைமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

81. பழைமை

801. பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

802. நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு

உப்புஆதல் சான்றோர் கடன்

803. பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை

804. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்

கேளாது நட்டார் செயின்

805. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க

நோதக்க நட்டார் செயின்

806. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

807. அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர்

808. கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாள்இழுக்கம் நட்டார் செயின்

809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு

810. விழையார் விழையப் படுப பழையர்கண்

பண்பின் தலைப்பிரியா தார்