திருக்குறள்- 83. கூடா நட்பு
திருக்குறள் 83. கூடா நட்பு அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
83. கூடா நட்பு
821. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
822. இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
823. பலநல்ல கற்ற கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது
824. முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும்
825. மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும்
சொல்லினான் தேறல்பாற்று அன்று
826. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
827. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
828. தொழுத கையுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து
829. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லல் பாற்று
830. பகைநட்புஆம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகம்நட்பு ஒரீஇ விடல்
