திருக்குறள்- 84 பேதைமை
திருக்குறள் 84. பேதைமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
84. பேதைமை
831. பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்
832. பேதைமை யுள்எல்லாம் பேதைமை காதன்மை
கைஅல்ல தன்கண் செயல்
833. நாணாமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்
பேணாமை பேதை தொழில்
834. ஓதிஉணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல்
835. ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு
836. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்
பேதை வினைமேல் கொளின்
837. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
838. மையல் ஒருவன் களித்துஅற்றால் பேதைதன்
கைஒன்று உடைமை பெறின்
839. பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதுஒன்று இல்
840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்துஅற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
