திருக்குறள்- 85. புல்லறிவாண்மை

திருக்குறள் 85. புல்லறிவாண்மை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

85. புல்லறிவாண்மை

841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையாது உலகு

842. அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்

இல்லை பெறுவான் தவம்

843. அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது

844. வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு

845. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற

வல்லதூஉம் ஐயம் தரும்

846. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா வழி

847. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு

848. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்உயிர்

போஒம் அளவும்ஓர் நோய்

849. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்டவாறு

850. உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து

அலகையா வைக்கப் படும்