திருக்குறள்- 88. பகைத்திறம் தெரிதல்
திருக்குறள் 88. பகைத்திறம் தெரிதல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
88. பகைத்திறம் தெரிதல்
871. பகைஎன்னும் பண்பில் அதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று
872. வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்ஏர் உழவர் பகை
873. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
874. பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
875. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கஅவற்றின் ஒன்று
876. தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
877. நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
878. வகைஅறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
879. இளைதுஆக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
880. உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்க லாதார்
