திருக்குறள்- 90. பெரியாரைப் பிழையாமை

திருக்குறள் 90. பெரியாரைப் பிழையாமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

90. பெரியாரைப் பிழையாமை

891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை

892. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும்

893. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு

894. கூற்றத்தைக் கையால் விளித்துஅற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்

895. யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்

896. எரியால் சுடப்படினும் உய்வுஉண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்துஒழுகு வார்

897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம்

தகைமாண்ட தக்கார் செறின்?

898. குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்றுஅன்னார் மாய்வர் நிலத்து

899. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்

900. இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்

சிறந்துஅமைந்த சீரார் செறின்