திருக்குறள்- 92. வரைவின் மகளிர்

திருக்குறள் 92. வரைவின் மகளிர் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

92. வரைவின் மகளிர்

911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்

912. பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர்

நயன்தூக்கி நள்ளா விடல்

913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணம்தழீஇ அற்று

914. பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட் பொருள்

ஆயும் அறிவி னவர்

915. பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்

916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்நலம் பாரிப்பார் தோள்

917. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்

பேணிப் புணர்பவர் தோள்

918. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப

மாய மகளிர் முயக்கு

919. வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் புரைஇலா

பூரியர்கள் ஆழும் அளறு

920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு