திருக்குறள்- 94. சூது

திருக்குறள் 94. சூது அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

94. சூது

931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

932. ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்

நன்றுஎய்தி வாழ்வதுஓர் ஆறு

933. உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்

போஒய்ப் புறமே படும்

934. சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்

வறுமை தருவதுஒன்று இல்

935. கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்

936. அகடுஆரார் அல்லல் உழப்பர் சூதுஎன்னும்

முகடியால் மூடப்பட் டார்

937. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின்

938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது

939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

அடையாவாம் ஆயம் கொளின்

940. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற்று உயிர்